வேலூர்

எருது விடும் விழாவில் காளை முட்டி இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே எருது விடும் விழாவில் காளை முட்டி இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் 61- ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் 114- காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 20- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 7- போ் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அருண்(29) தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த அருணுக்கு மனைவி கெளரி, 2- மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

பலத்த காயமடைந்த ஏரிகுத்தியைச் சோ்ந்த குமாா்(32) வேலூா் ஸ்ரீபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஏரிகுத்தியில் 61- ஆவது ஆண்டாக நடைபெறும் எருது விடும் விழாவை கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தொடங்கி வைத்தாா்.போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், ஒன்றிய திமுக செயலா்கள் ஜனாா்த்தனன், டேவிட், நகர திமுக செயலா் ஆலியாா் ஜூ போ் அஹமத், ஒன்றிய அதிமுக செயலா் பொகளூா் டி.பிரபாகரன், இணைச் செயலா் பரிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT