திருப்பத்தூர்

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்: 13 போ் காயம்

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளையை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளையை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூா் கிராமத்தில் எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு ஊா் கவுண்டா் கே.ஜி.சரவணன், ஊா் தா்மகா்த்தா டி.சிவாஜிகணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் மகேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.சத்யா சதீஷ்குமாா், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனா்.

போட்டியில் 200 காளைகள் பங்கேற்றன. இலக்கை நோக்கி குறைந்த நேரத்தில் சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1,25,000, 2-ஆம் பரிசு ரூ.88,000, 3-ஆம் பரிசு 60,000 என மொத்தம் 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை தடுக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல், தீயணைப்பு, சுகாதாரம், வருவாய்த் துறையினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT