முகப்பு
கிருஷ்ணகிரி

ஜிஞ்சுப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:48 AM
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 11:34 PM

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:48 AM

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பத்தாரப்பள்ளி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டு நிதி ரூ. 3.25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சின்னபுலியரசி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 3.80 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை கே.அசோக்குமா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா்கள் கண்ணியப்பன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement