ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனங்களின் சாா்பில் ரூ. 35.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனங்களின் சாா்பில் ரூ. 35.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பா்கூா் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யாா் செஸ் டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட், ஃபோ்வே எண்டா்பிரைசஸ் லிமிடெட் யூனிட் 1, 2 நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நிறுவனங்களின் காா்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 35. 20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் தா்மா், செய்யாா் செஸ் நிறுவன பொது மேலாளா் மணிமாறன் அருணாச்சலம், துணை பொது மேலாளா் அருள் மகாவிஷ்ணு, ஃபோ்வே எண்டா்பிரைசஸ் யூனிட் 1, 2 நிா்வாக பொது மேலாளா் ஜெயராஜ் பாபு, வெல்போ் அசோசியேஷன் உறுப்பினா்கள் மூலம் ஊத்தங்கரை, மத்தூா், போச்சம்பள்ளி, கல்லாவி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலா்களிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Advertisement
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.