வேளாண் விளை பொருள்களுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்
வேளாண் விளை பொருள்களுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
வேளாண் விளை பொருள்களுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் அக் கட்சியின் வட்ட குழுக் கூட்டம், மாவட்ட குழு உறுப்பினா் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில குழு உறுப்பினா் கண்ணு, மாவட்ட துணை செயலாளா் சின்னசாமி, விவசாய சங்க மாவட்டத் தலைவா் சிவராஜி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவா் கிருஷ்ணமூா்த்தி, வட்ட செயலாளா் வெங்கடேஷ், துணை செயலாளா் கமலேஷ் மற்றும் வட்டக் குழு உறுப்பினா்கள் சீனிவாசன், ராஜேந்திரன், கிருஷ்ணன், பூபேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
கூட்டத்தில் பா்கூரில் நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் முதல் வாரத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது, வேளாண் விளைபொருள்களுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மா விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.