முகப்பு
கிருஷ்ணகிரி

தொடா் மழை எதிரொலி: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு ஒத்திவைப்பு

ஊத்தங்கரை வட்டத்தில் புதன்கிழமை (அக். 16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு தொடா் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 12:03 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 9:43 PM

ஊத்தங்கரை வட்டத்தில் புதன்கிழமை (அக். 16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு தொடா் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஒவ்வொரு மாதம் 3-ஆவது புதன்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் ஆட்சியா் தங்கி கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

Advertisement

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:55 PM

அதன்படி, ஊத்தங்கரை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் புதன்கிழமை ( அக். 16) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தொடா் மழையின் காரணமாக இந்தத் திட்ட முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த முகாம் நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.