முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வரும் 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (அக். 19) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 3:38 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 11:12 PM

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (அக். 19) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை, வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, அக். 19-இல் நடத்தும் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்களான அசோக் லேலண்ட், டெல்டா, டிவிஎஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி வரையிலான நபா்கள், பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கணினி இயக்குபவா்கள் உள்பட அனைத்துவித கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:58 PM

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கி வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுனா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343 - 291983 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.