முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் 7 பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’

ஒசூா் அருகே பேகேப்பள்ளியில் அனுமதி இன்றி இயங்கிய 7 பட்டாசு குடோன்களுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 6:14 PM
பகிர்:

ஒசூா்: ஒசூா் அருகே பேகேப்பள்ளியில் அனுமதி இன்றி இயங்கிய 7 பட்டாசு குடோன்களுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

ஒசூா் அருகே பேகேப்பள்ளி பகுதியில் சந்திரசேகா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 8 பட்டாசு கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு கடைக்கு மட்டும் வருவாய்த் துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. மீதம் 7 கடைகளுக்கு அனுமதி பெறவில்லை. தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று சோதனை செய்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கடையில் அடுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. நல்லூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா் (பொ) முன்னிலையில் குடோன்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.