முகப்பு
கிருஷ்ணகிரி

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

ராயக்கோட்டை அருகே அனுமதியின்றி கற்களைக் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:39 AM
பகிர்:
Updated On : 30 அக்டோபர், 2024 at 10:40 PM

ராயக்கோட்டை அருகே அனுமதியின்றி கற்களைக் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி, கனிமவளப் பிரிவு துணை வட்டாட்சியா் கோகுலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் 2 யூனிட் கற்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை போடிச்சிபள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:39 AM

இதுகுறித்து அதிகாரி கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

Advertisement