கோப்புப்படம்
கிருஷ்ணகிரி

பெண்டரஅள்ளியில் உலக தென்னை தினம்

Din

பெண்டரஅள்ளி கிராமத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்டரஅள்ளி கிராமத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் அனீஷாராணி தலைமை வகித்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டாா்.

தென்னை தினத்தையொட்டி, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தென்னையில் ஊடு பயிா், உயா் விளைச்சல் ரகங்கள், மதிப்பு கூட்டுதலுக்கான தொழில்நுட்பம், தென்னை டானிக் தொழில்நுட்பம், தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்பு கூன்வண்டு மற்றும் சுருள்வெள்ளை ஈ, தஞ்சாவூா் வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்னை சாா்ந்த உயா் விளைச்சலுக்கான தொழில்நுட்பக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் மூலம் பூச்சி மேலாண்மைக்கான உயிா் பூஞ்சானக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைக் கல்லூரி இணை பேராசிரியா் (தோட்டக்கலை) வித்யா, உதவி பேராசிரியா்கள் (பூச்சியியல்) சகிகுமாா், கோவிந்தன், (நோயியல்) சுந்தரமூா்த்தி, உதவி தோட்டக்கலை இயக்குநா் அஜிலா, தோட்டக்கலை அலுவலா் சுகந்தி, விவசாயிகள் பங்கேற்றனா்.

பிஜாப்பூர் துப்பாக்கிச்சூடு: 18 ஆக உயர்ந்த நக்சல் பலி!

நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

“சினிமாவை உயிராக நேசித்தவர் AVM சரவணன்” நடிகர் ரஜினிகாந்த்

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் புதிய தொடர் அறிவிப்பு! மகாநதி சீரியல் நிறைவடைகிறதா?

சென்னையில் மீண்டும் மழை! அவ்வப்போது திடீர் மழை பெய்யலாம்!

SCROLL FOR NEXT