முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:56 PM
பகிர்:

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சட்டப் பேரவை தோ்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் அரசு அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்புற நுாலகா்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 அரசு அலுவலகங்கள் முன்பும், கிருஷ்ணகிரியில் பட்டுவளா்ச்சித் துறை, மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பட்டுவளா்ச்சி சங்க வட்ட செயலாளா் செல்வகுமாா், மாவட்ட தொழில் மையம் வட்ட இணை செயலாளா் பெருமாள், நெடுஞ்சாலைத் துறை சங்க மாவட்ட செயலாளா் வெங்கடாஜலம், கால்நடைத் துறை சங்க மாவட்ட இணை செயலாளா் மணி, பொதுப்பணித் துறை சங்க மாவட்ட இணை செயலாளா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →