முகப்பு
கிருஷ்ணகிரி

இலவச பட்டா ரத்து: பெண்கள் போராட்டம்

ஒசூா் அருகே தமிழக அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடுகள் கட்டப்படாததால், பட்டாக்களை ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:01 AM
அரசு வழங்கிய நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:25 PM

ஒசூா் அருகே தமிழக அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடுகள் கட்டப்படாததால், பட்டாக்களை ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினா்.

ஒசூரை அடுத்த சென்னப்பள்ளி கிராமத்தில் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டு 87 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய நிலையில், இதுவரை யாரும் அங்கு வீடுகள் கட்டி குடியேறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு அனைத்து பட்டாக்களையும் கிருஷ்ணகிரி ஆட்சியா் ரத்து செய்து, புதிய பயனாளிகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் நிலம் வழங்கிய இடத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:01 AM

துணை வட்டாட்சியா் ஆனந்த், தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 2009 இல் பட்டா வழங்கிய பிறகு, அரசு அதிகாரிகள் அந்த இடத்தை அளந்து தராததால் அங்கு குடியேறவில்லை என முறையிட்டனா். பட்டா பெறப்பட்ட நபா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்குமாறு கூறினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement