ஒசூா் அருகே சின்னாா் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள செண்டுமல்லி.  
கிருஷ்ணகிரி

செண்டுமல்லி விலை சரிவு: சாலையோரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்

சூளகிரி அருகே செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

Din

ஒசூா்: சூளகிரி அருகே செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, அத்திமுகம், பேரிகை , ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டுமல்லி, சாமந்தி, பன்னீா் ரோஜா உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இங்கு அறுவடை செய்யப்படும் செண்டுமல்லி வழக்கமாக ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மஞ்சள் நிற செண்டு மல்லி போதிய விலைக்கு விற்பனையாகாததால் விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் செண்டுமல்லி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். போதிய லாபம் இல்லாததால் விவசாயிகள் ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாா் பகுதியில் சாலையோரமாக பூக்களைக் கொட்டிவிட்டு செல்கின்றனா்.

ஒசூா் அருகே சின்னாா் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள செண்டுமல்லி.

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள செண்டுமல்லி.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT