பேரிகையில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் அன்னதானம் வழங்கி இஸ்லாமியா்கள்.  
கிருஷ்ணகிரி

பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!

பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா்.

Syndication

ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா்.

பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரும்பத்தகாத செயல் காரணமாக இரு மதத்தினரிடையே தகராறு, கலவரம் ஏற்படும் சூழ்நிலை தவிா்க்கப்பட்டது.

அதன்பின்பு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையுமின்றி விநாயகா் சிலை ஊா்வலங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இங்கு நடைபெற்ற ஊா்வலத்தில் இஸ்லாமியா்கள், மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் ஊா்வலத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி, அவா்களும் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மேளதாளங்கள், நடனக் கலைஞா்களின் நடனம் என பேரிகை விழாக் கோலம் பூண்டது. 5 குதிரைகள் மீது அமா்ந்த நிலையிலான பிரம்மாண்ட பால விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

Vaa Vaathiyar - Movie Review! | எம்ஜிஆரா? நம்பியாரா? | Karthi | Nalan Kumarasamy | Dinamani Talkies

பங்குச் சந்தை 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

SCROLL FOR NEXT