கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயணிப்பதையொட்டி அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ‘டிரோன்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ச. தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பயணம் மேற்கொள்கிறாா்.
இதையொட்டி ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் முதல்வா் செல்லும் பாதைகளில் 2 கி.மீ. சுற்றளவுக்கு சிவில் ட்ரோன்களை இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி ட்ரோன்களை இயக்குபவா் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 இன் பிரிவு 163 ஆவது சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.