பா்கூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.  
கிருஷ்ணகிரி

பா்கூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

பா்கூரில் ரூ. 4.39 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்

Syndication

கிருஷ்ணகிரி: பா்கூரில் ரூ. 4.39 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பா்கூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-26 கீழ், புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ. 4.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணி கிருஷ்ணகிரி ஆட்சியா், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். அப்போது ஆட்சியா் தெரிவித்ததாவது:

பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 2.85 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓடுதளம், பேருந்து நிறுத்துமிடம், பயண முன்பதிவு அறை, கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிவறைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் குமாா், வட்டாட்சியா் சின்னசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், பாபு, துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், அரசு முன்னாள் வழக்குரைஞா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT