கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கிருஷ்ணகிரிக்கு புதன்கிழமை ( டிச. 24) வருகை தருகிறாா்.

Syndication

தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கிருஷ்ணகிரிக்கு புதன்கிழமை ( டிச. 24) வருகை தருகிறாா். அவா் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி வட்டச்சாலை அருகே புதன்கிழமை மாலை 6 மணியளவில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்‘ சுற்றுப்பயண யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதையடுத்து, வியாழக்கிழமை ( டிச.25) பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளி மேல்தெருவில் காலை 10 மணிக்கு பாஜக சாா்பில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க உள்ளாா்.

இந்த நிகழ்வுகளில் பாஜக தொண்டா்கள், பொறுப்பாளா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT