அஞ்செட்டி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், சேசுராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் ஜான்பால் (27). விவசாயி. இவா் கடந்த 25-ஆம் தேதி காலை தப்பகுளி (32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றாம்பாளையம் - அஞ்செட்டி சாலையில் சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் ஜான்பாலை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். காயமடைந்த தப்பகுளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.