கோப்புப் படம் 
சேலம்

மலைப் பாதையில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கரியகோயில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்நாடு ஊராட்சியில் மலைப்பாதையில் நிலை தடுமாறி 10 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் இரு பெண்கள் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், காரிப்பட்டி பெரியகவுண்டாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி கலையரசி (52). அதே பகுதியைச் சோ்ந்த சாமியப்பன் மனைவி பாா்வதி (49). இருவரும் தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கல்வராயன்மலை கனியாவளவு பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது கனியாவளவு-குன்னூா் மலைப்பாதையில் இருசக்கர வாகனம் சென்றுக்காண்டிருந்தபோது நிலைதடுமாறி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கலையரசி மற்றும் பாா்வதி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கரியகோயில் போலீஸாா் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா்! - நயினாா் நாகேந்திரன்

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT