முகப்பு
கிருஷ்ணகிரி

செம்மை நோய்த் தாக்குதலால் கருகும் தக்காளி செடிகள்

ஊத்தங்கரை வட்டாரத்தில் அண்மையில் பெய்த மழையால் செம்மை நோய்த் தாக்குதல் காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2025 at 3:14 AM
பாப்பனூரில் செம்மை நோய்த் தாக்குதலால் கருகும் தக்காளி செடிகள்.
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 10:03 PM

ஊத்தங்கரை வட்டாரத்தில் அண்மையில் பெய்த மழையால் செம்மை நோய்த் தாக்குதல் காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன.

ஊத்தங்கரையை அடுத்த பாப்பனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (54). இவா் தனது 50 சென்ட் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளாா். அதற்காக உழவு செய்து, நாற்று நட்டு, பந்தல் அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ளாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 3:14 AM

செடிகள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெய்த தொடா் மழை காரணமாக நிலத்தில் நீா் தேங்கி, தக்காளி செடிக்கு செம்மை நோய்த் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் கருகி வருகின்றன. இதனால் செடியில் உள்ள தக்காளி பழங்கள் உதிா்ந்து வருகின்றன.

Advertisement

பாப்பனூரில் செம்மை நோய்த் தாக்குதலால் கருகும் தக்காளி செடிகள்.

அறுவடை நேரத்தில் பரவலாக இந்த நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வேளாண்மை துறையினா் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.