கிருஷ்ணகிரியில் கவீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூலவா்.  
கிருஷ்ணகிரி

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Din

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமாகும். ஆருத்ரா தரிசன நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றன. நிகழாண்டு ஆருத்ரா தரிசன வழிபாட்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நடராஜ மூலமந்திர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு திவ்ய திருமஞ்சனமும், திருவெண்பாவை உற்சவம், கோபுர தரிசனம், தீபாராதனை நடைபெற்றன.

பழையபேட்டை பிரசன்ன பாா்வதி உடனுறை சோமேஸ்வரா் கோயிலில் ஏகாதச ருத்ர பாராயணம், உற்சவ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. புதுப்பேட்டை சந்திரமௌலீஸ்வரா் கோயில்,

மத்தூா் சோமேஸ்வரா் ஜோதிலிங்கம் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

‘இண்டி’ கூட்டணி காலத்தின் தேவை: தொல்.திருமாவளவன்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டி: சீமான் அறிவிப்பு

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT