நவீன் 
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கு: இருவா் கைது

ஒசூரில் மினி லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Din

ஒசூரில் மினி லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தோ்ப்பேட்டை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (32) என்பவா், மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். கடந்த 21-ஆம் தேதி இரவு வீட்டின் முன் இருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

வினோத்குமாா்

இதுகுறித்து ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனா். பின்னா் சிவகுமாரை கொலை செய்தது ஒசூரைச் சோ்ந்த நவீன் (33), வினோத்குமாா் (26) ஆகியோா் என தெரியவந்தது.

இவா்கள் இருவரை போலீஸாா் கைது அவா்களிடம் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உறவினரான நவீனின் மனைவியிடம் சிவகுமாா் அடிக்கடி கிண்டல் செய்து வந்தாகவும், இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் சிவகுமாா் கேட்காததால் சிவகுமாரை நவீன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT