மின்சாரம் பாய்ந்து பலியான ராமமூர்த்தி . 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை அருகே திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானது பற்றி...

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார்.

மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

திமுக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, கேத்துநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை பரிசோதித்த மருத்துவர் ராமமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT