கிருஷ்ணகிரி

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூங்கரக ஊா்வலம்

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துவந்தனா்.

Din

ஒசூா்: ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துவந்தனா்.

ஒசூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அலகு குத்து திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கோயில் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி பால் கம்பம் நடுதல், காப்புக் கட்டுதல், கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் மாவிளக்கு எடுத்துவந்து பூஜைகள் செய்து வழிபட்டனா். திங்கள்கிழமை அண்ணா நகா் பகுதியில் அமைந்துள்ள சின்ன கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூங்கரகம், பால்குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

முன்னதாக வட்டாட்சியா் அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை வழியாக கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலை ஊா்வலம் வந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்துவருகின்றனா்.

ரஜினியை இவர் இயக்கினால் எப்படி இருக்கும்?

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் நார்வே..! நிறைவேற்றிய எர்லிங் ஹாலண்ட்!

முதல்வர் ஸ்டாலின், அஜித், அரவிந்த் சாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி

குறுகிய காலத்தில் முடிவடையும் பிரபல தொடர்!

SCROLL FOR NEXT