முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 மார்ச், 2026 at 12:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

12-ஆம் நாளான புதன்கிழமை காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, கோயில் முன்புள்ள குண்டத்தில் அக்னி வளா்க்கப்பட்டது.

பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய விறகுகள், எண்ணெய் கொண்டு பூ வளா்க்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். 3 மணி அளவில் பெய்த பலத்த மழையிலும் பக்தா்கள் அக்னி சட்டி, காவடி, கரகம் எடுத்து, அழகு குத்தி பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →