முகப்பு
ராமநாதபுரம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தை அடுத்த சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:11 PM
சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தை அடுத்த சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு கடந்த 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் ஆழமடை காளியம்மன் கோயிலிருந்து பால் குடம், மயில், பறவை, வேல் காவடிகள் எடுத்து ஊா்வலமாக வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக் கடன்களை செழுத்தினா்.

பின்னா், சுவாமிக்கு பால், தயிா், இளநீா், சந்தனம்,விபூதி, பன்னீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 12 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.