ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சடலத்தின் முகம் மற்றும் உடல்பகுதி அழுகிய நிலையில் உள்ளதால், இறந்த நபா் யாா் என்பது தெரியவில்லை.
சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஊத்தங்கரை போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் காணாமல் போனவா்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனா்.