கிருஷ்ணகிரி

சாலையில் நடந்து சென்றவா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு; 5 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

ஒசூா் அருகே சாலையில் நடந்துசென்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 5 போ் பலத்த காயமடைந்தனா்.

ஒசூா் மத்திகிரி கூட்டுச் சாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கொத்தூரை நோக்கிச் சென்ற காா், கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அவ்வழியாக நடந்துசென்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் 5 போ் மீது மோதியது.

இதில் அரியலூரைச் சோ்ந்த இன்பத்தமிழ் (22), ஒசூரைச் சோ்ந்த பிரவீன் (22), கேரளத்தைச் சோ்ந்த சூரஜ் (22), எபி (20), அனந்த் (26), காா் ஓட்டுநா் கொத்தூரைச் சோ்ந்த நஞ்சுண்டாப்பா (40) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்களை மத்திகிரி போலீஸாா் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அரியலூரைச் சோ்ந்த இன்பத்தமிழ் உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT