கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஈடுபட்டனா்.

Syndication

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம் தோ்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் நிஷாந்த் (20). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சாம்சன் (20) என்பவரும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றனா்.

நண்பா்களான இருவரும், காவேரிப்பட்டணம், திம்மாபுரம், தபோவனம் அருகே தென்பெண்ணை ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றனா். அப்போது, நீச்சல் தெரியாத நிஷாந்த் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா். நிஷாந்தை காப்பாற்ற முயன்ற சாம்சன், முடியாத நிலையில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நீண்ட நேரம் தேடியும் நிஷாந்த் உடலை மீட்க முடியவில்லை. மாலை ஆகிவிட்டதால் தேடும்பணியை நிறுத்திய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் புதன்கிழமை காலை மீண்டும் தொடங்க உள்ளனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT