முகப்பு
தேனி

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

Updated On : 2 மார்ச், 2026 at 2:52 AM
மாயமான இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் - (கோப்புப் படம்)
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சின்னமனூரைச் சோ்ந்த ராஜா மகன் நாகமுருகன் (18). இவா் தனது நண்பா்களுடன் சின்னமனூா்-மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது அவா் மூழ்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் ஆற்றில் இறங்கி மாயமான நாகமுருகனை தேடினா். இதையடுத்து, இரவு நேரமானதால் தேடுதலை நிறுத்திவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.

Advertisement

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.