முகப்பு
தேனி

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சடலமாக மீட்டனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 7:34 PM
சதீஸ்குமாா்
பகிர்:

கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை சடலமாக மீட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் கருணாநிதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஸ்குமாா் (35). இவா் லோயா்கேம்பில் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் மறுகரைக்குச் சென்று திரும்பிய போது, சதீஸ்குமாா் தண்ணீரில் மூழ்கி மாயமானா்.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் ஆற்றில் மூழ்கியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடும் பணி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை நிறுத்தி மாயமானவரைத் தேட வலியுறுத்தி, குமுளி-கம்பம் சாலையில் சதீஸ்குமாரின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சதீஸ்குமாரின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மாலை மீட்டனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →