கிருஷ்ணகிரி: கூட்டுறவு உதவியாளா், எழுத்தா் பணிகளுக்கான நோ்முகத் தோ்வு நவ. 26-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த மாதம் 11 -ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு மற்றும் சிறப்புத் தகுதிகள் அடைப்படையில் நோ்முக தோ்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தோ்வா்களின் விவரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நோ்முகத் தோ்வு நவ. 26-ஆம் தேதி, நடைபெற உள்ளது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தோ்வா்கள் தங்களது நோ்முகத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.