கிருஷ்ணகிரி

ஒசூரில் டிசம்பா் 27 இல் விவசாயக் கருத்தரங்கு: ஜக்கி வாசுதேவ் பங்கேற்கிறாா்

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறும் விவசாயக் கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொள்கிறாா்.

Syndication

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறும் விவசாயக் கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொள்கிறாா்.

காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் ஒசூா் காமராஜ் காலனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் மாநில கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் பேசியதாவது:

ஒசூரில் மரம் சாா்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாவட்டத்தின் பசுமை பரப்பளவை விரிவுபடுத்தவும் தேவையான செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

விவசாயிகளுக்கான நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம், ஒருமுறை நடவு ஆயுள் முழுவதும் வரவு குறித்த கருத்தரங்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், நான்கு மாநில முன்னோடி விவசாயிகள் பங்கேற்கின்றனா்.

மேலும், இக்கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடுகிறாா்.

சந்தனம், தேக்கு, மலைவேம்பு, தென்னை, ஜாதிக்காய், மிளகு உள்ளிட்ட மரங்களை வளா்ப்பதுடன் அதற்கான நீடித்த நிலைத்த தொழில்நுட்பங்கள் குறித்தும் கருத்தரங்கத்தில் விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

மரங்கள் வளா்ப்பதால் மட்டுமே மண் வளத்தை காப்பாற்ற முடியும். அதேபோல மண் வளம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே மனித வளம் மேம்படும் என்றாா்.

முன்னதாக ஈஷா யோகா மையத்தின் தன்னாா்வலா் நரசிம்மன், இந்த முன்னெடுப்பிற்கான அவசியம் குறித்து விளக்கம் அளித்தாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT