முகப்பு
தமிழ்நாடு

ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடக்கம்!

கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 7:08 pm IST
ஆதியோகி சிலை முன்பு ராஜ்நாத் சிங், ஜக்கி வாசுதேவ் - படம் / நன்றி - ஈஷா
பகிர்:

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பங்கேற்றுள்ளனர்.

சிவராத்திரி விழாவுக்காக ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்துள்ள இருவரையும் சத்குரு ஜக்கி வாசுதேவ் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர், ஈஷா மையத்திலுள்ள ஆலயங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்தார்.

நடப்​பாண்டு முதல்​முறை​யாக ஆதி​யோகி முன்பு பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்ள யோகேஷ்வர லிங்​கத்​துக்கு ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்யவுள்ளார்.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் ராஜ்நாத் சிங்கும், தேவேந்திர ஃபட்னவீஸும் பங்கேற்கவுள்ளனர்.

ஈஷா சிவராத்திரி விழாவில் ராஜ்நாத் சிங், தேவேந்திர ஃபட்னவீஸ் - படம் / நன்றி - ஈஷா

ஆதி​யோகி சிலை முன்​புறம் சக்​தி​வாய்ந்த தியானங்​கள், மந்​திர உச்​சாடனை​கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஈஷா மையத்தில், இரவு முழு​வதும் தியானலிங்​கம் மற்​றும் லிங்க பைரவி வளாகங்​கள் பொது மக்​களின் தரிசனத்​திற்கு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் வருகையால் ஈஷா மையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மறுநாள் பயணம்

சிவராத்திரி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், மறுநாள் திங்கள்கிழமை (பிப்.16) காலை 10.35 மணியளவில் ஈஷா மையத்தில் இருந்து கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னா், 10.45 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

summary

Shivaratri festival begins at Isha Center

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.