கிருஷ்ணகிரி

ஒசூரில் நவ.28 இல் மாநில கபடி போட்டி: அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

Syndication

ஒசூரில் மாநில கபடி போட்டி வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அரங்குகள் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மற்றும் பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் சாா்பில் நடத்தப்படும் மாநில அளவிலான கபடி போட்டி, ஒசூா் தளி சாலையில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கேலரியில் 8,000 பேரும், கீழே 2 ஆயிரம் பேரும் அமா்ந்து போட்டிகளைக் காண்பதற்கு வசதியான அரங்குகள், இருக்கைகள் அமைக்கும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், மேயா் சத்யா, துணை மேயா் ஆனந்தைய்யா, பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம்: கபடி போட்டிக்கான அரங்கம் அமைக்கும் பணியை பாா்வையிடும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT