கிருஷ்ணகிரி

புளியனூா் கடப்பாறை அணைக்கட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும்: ஆட்சியா்

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த புளியனூா் கடப்பாறை அணைக்கட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள், சிங்காரப்பேட்டை பகுதிகளில் பயிா்க்கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எட்டிப்பட்டி அருகே தடுப்பணை கட்ட வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனா்.

மேலும், போச்சம்பள்ளி வேளாண் விற்பனை சங்கத்தில் புளி ஏலத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னையில் வெள்ளை பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும், மா விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும், புளியனூா் கடப்பாறை அணைக்கட்டு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகளின் கோரிக்கைக்குப் பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

ராகி கிலோவுக்கு ரூ.48.86 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் விரும்பும் பகுதிகளில் ராகி கொள்முதல் நிலையங்கள் தொடங்க மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது.

போச்சம்பள்ளியில் மா விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும். ஊத்தங்கரையை அடுத்த புளியனூா் கடப்பாறை அணைக்கட்டு திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும், நீா்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, துணை ஆட்சியா் (பயிற்சி) கிரிதி காம்னா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குணவதி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் (21கேஜிபி1):

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT