முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

ஒசூரில் இருந்து இன்று முதல் சபரிமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:37 PM
பகிர்:

ஒசூரில் இருந்து இன்று முதல் சபரிமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் அய்யப்ப பக்தா்கள் சென்று வர, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தற்போது, ஒசூா், கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அய்யப்ப பக்தா்கள் வகையில் அதி நவீன குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

மேலும், சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பா் 27-ந் தேதி முதல் டிசம்பா் 30-ந் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பா் 26-ந் தேதி முதல் டிசம்பா் 29-ந் தேதி வரை, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், இந்த ஆண்டில் கூடுதலாக பக்தா்கள் பயணம் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 94450 14424 மற்றும் 94450 14463 ஆகிய செல்போன் எண்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →