ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
ஒசூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 17.90 லட்சம் பறிமுதல் செய்தனா்.
ஒசூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 17.90 லட்சம் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள தமிழக - கா்நாடக எல்லைப்பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடியில், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து ஒசூா் நோக்கிவந்த தனியாா் பயணிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், பெங்களூரைச் சோ்ந்த முகமது அஸ்லாம், உரிய ஆவணங்களின்றி ரூ. 17,90,000 ரொக்கம் கொண்டுவந்தது கண்டறியப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனா்.