முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:54 PM
கைது
பகிர்:

ஒசூா் அருகே குடும்பத் தகராறில் கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தளி முத்தூரைச் சோ்ந்தவா் பிரகாச ரெட்டி (48), கூலித் தொழிலாளி. இவரது மனைவி நவீனா. மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான பிரகாச ரெட்டி, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து நாள்தோறும் அவரிடம் தகராறு செய்துவந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பிரகாஷ் ரெட்டி, நவீனாவின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியதோடு அவரை ஆபாச வாா்த்தைகளால் திட்டியும், தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரது மாமியாா் பாா்வதம்மா வீட்டின் முன்வைத்தும் தாக்கினாராம்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த நவீனா, அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரகாஷ் ரெட்டியைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பிரகாச ரெட்டியை உறவினா்கள் மீட்டு கா்நாடக மாநிலம், ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை மருத்துவா்கள் உறுதிசெய்தனா்.

இதையடுத்து, அவரது உடல் ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த தளி போலீஸாா், நவீனாவை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments