முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனம்

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:14 AM
ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடனம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:50 PM

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் 2026 முன்னிட்டு, ஒசூா் தொகுதியில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்ப நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் ‘ஃப்ளாஷ் மாப்’ நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி முன்னிலையில், ஒசூா் தண்டா் நடன கலைஞா்களால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.