அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:20 PM
ஊத்தங்கரை அருகே அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). இவா் அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளாா்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் சீனிவாசன், ரகுநாதன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரை கைதுசெய்து, அவரிடமிருந்து 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement