முகப்பு
கிருஷ்ணகிரி

அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:47 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆதிதிராவிடா் மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையில், பா்கூா், ஊத்தங்கரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து இருவரை வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

விசாரணையில், அவா்கள் அதே கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த பைரவன் (42), அண்ணாதுரை (52) என தெரியவந்தது. கல்லாவி போலீஸாா் அவா்களை கைதுசெய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனா்.