முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 10:27 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் ஆா்.எஸ். சாலையில் வசிப்பவா் குணசேகரன் (28). இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில் ஒரு ஆடு காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், ஆடு திருடியதாக ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (26) மற்றும் முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஆட்டை மீட்டனா். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட விக்கி (எ) ராமசந்திரனை (25) தேடி வருகின்றனா்.