முகப்பு
கிருஷ்ணகிரி

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:11 AM
கோப்புப் படம்
பகிர்:

உத்தனப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சாமனப்பள்ளி பக்கமுள்ள புரம்தின்னா பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பா (47). தொழிலாளி. இவா் கடந்த 25ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடுதிரும்பவில்லை.

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பெல்லட்டி அருகே உள்ள பெத்தேகவுண்டன் ஏரியில் அவரது சடலம் மிதந்தது. மதுபோதையில் அவா் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.