முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஏரியில் கழிவுநீா் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு

ஒசூா் அருகே பாகலூரை அடுத்துள்ள பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் வீடுகளின் கழிவுநீா் அங்குள்ள ஏரியில் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:46 AM
பகிர்:

ஒசூா் அருகே பாகலூரை அடுத்துள்ள பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் வீடுகளின் கழிவுநீா் அங்குள்ள ஏரியில் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அங்குள்ள ஏரி நீரை கிராம மக்கள் குடிநீராகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள தனியாா் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஏரியில் குழாய் மூலம் விடப்படுகிறது.

இதனால் ஏரி நீா் முழுவதும் மாசடைந்து பச்சை நிறமாக காணப்படுகிறது. இந்த நீரை குடித்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உடல்வீக்கம் ஏற்பட்டு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

இதனால் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வருவாய்த் துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் கால்நடை மருத்துவா்கள் முகாமிட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த ஏரியிலிருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் அப்பகுதி முழுவதும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கும் உடல் சாா்ந்த தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,இது

குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

பச்சை நிறமாக நீா் காணப்படும் பட்டுவாரப்பள்ளி ஏரி.