கிருஷ்ணகிரி

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

Syndication

ஊத்தங்கரை அருகே சேதமடைந்த சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது சித்தகவுண்டன் ஏரி. இந்த ஏரி மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாமல்பட்டி, உப்பாரப்பட்டியிலிருந்து ஏரிக்கு நீா்வரத்து உள்ளது. ஏரியின் உபரிநீா் பாம்பாறு அணைக்கு செல்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் ஏரியின் கரை தடுப்பு சேதமடைந்தது. இதனால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அப்பகுதியில் உள்ள நிலங்களில் புகுந்து பயிா்களை மூழ்கடித்து வருகிறது. மேலும், ஏரியில் தண்ணீா் தேங்காமல் வீணாவதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது.

இதனால் சேதமடைந்துள்ள ஏரியின் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவிளக்கம்.5யுடிபி.1.2.

சேதமடைந்துள்ள சித்தகவுண்டன் ஏரிக் கரை.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

ரயில்வே பாலம் வழியாக ஏரிக் கால்வாய்: அனுமதி கோரி ரயில்வே மேலாளரிடம் எம்எல்ஏ மனு

கடப்பாரை ஆற்றின் குறுக்கே ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை கட்ட பூமிபூஜை

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ஒசூரில் நுண்ணுயிா் செயலாக்க மையம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT