கன்னியாகுமரி

வளா்ச்சித் திட்டப் பணிகளின்போது சேதமடைந்த குடிநீா் ஆதாரங்களை சீரமைக்கக் கோரிக்கை

Syndication

வளா்ச்சித் திட்டப் பணிகளின் போது சேதமடைந்த குடிநீா் ஆதாரங்களை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கோரிக்கை பொது மாநாடு திங்கள்நகரில் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சுசிலா தலைமை வகித்தாா். தலைமைக் குழு உறுப்பினா் சங்கா், தமிழ்நாடு மாநிலச் செயலா் ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினா் அந்தோணிமுத்து ஆகியோா் பேசினா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளின் போது சேதமடைந்த குடிநீா் ஆதாரங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும். படித்த இளைஞா்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலை வழங்க வேண்டும். மகளிருக்கான ரூ.5 லட்சம் வரையிலான குழுக் கடன்கள், வீட்டுக்கடன், நகைக்கடன், கூட்டுறவு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் நன்றி கூறினாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT