கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம்

Syndication

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் மாநகர அவைத் தலைவா் என்.செந்தில்குமாா் தலைமையில், திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகர மேயரும், மாநகர திமுக செயலாளருமான எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். இதில், வரும் பிப். 14-ஆம் தேதி திருப்பத்தூரில் வடக்கு மண்டல பாக முகவா்கள் மாநாடு நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு, ஒசூா் மாநகர திமுகவிலிருந்து ஆயிரக்கணக்கில் பங்கேற்பது, மாா்ச் ஒன்றாம் தேதி முதல்வரின் பிறந்த நாளையொட்டி, ஏழை எளியோா், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது, வரும் 22-ஆம் தேதி ஒசூரில் நடைபெறும் நம் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு திரளானோா் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், பகுதி செயலாளா்கள் ஆனந்தய்யா, எம்.கே.வெங்கடேஷ், ஜி.ராமு, எம்.ராஜா தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பொறியாளா் அணி துணைச் செயலாளா் வெ.ஞானசேகரன், மாவட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

கிருஷ்ணகிரியில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தகராறில் தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழப்பு

பேருந்தில் முதியவரிடம் ரூ.7.50 லட்சத்தை திருடியவா் கைது

130 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சா், எம்.பி. பங்கேற்பு

SCROLL FOR NEXT