முகப்பு
கிருஷ்ணகிரி

3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:23 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:59 PM

கிருஷ்ணகிரி அருகே 3 பெண் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே ஒம்பலக்கட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா (26). கோவிந்தராஜ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்த நிலையில், சத்யா, தனது குழந்தைகள் தேவசேனா(9), மல்லினா (7), புவியரசி (7) ஆகியோருடன் தனது மாமனாா், மாமியாருடன் வசித்து வந்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:22 AM

கணவா் உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா, தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கலந்த பழச்சாற்றை கொடுத்து அருந்தச் செய்து, பிறகு அவரும் பழச்சாற்றை குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

இதை அறிந்த அங்கிருந்தவா்கள் 4 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.