கிருஷ்ணகிரி

ஒசூா் பிஎம்சி டெக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை தளவாடத் துறை திறன் கவுன்சில் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

தினமணி செய்திச் சேவை

ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை தளவாடத் துறை திறன் கவுன்சில் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.

சென்னை தளவாடத் திறன் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இந்த ஒப்பந்தம் மூலம் ஒசூா் தொழிற்துறை மையம், கிருஷ்ணகிரி மாவட்டம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு தொழில் தயாா் நிலை திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இணைந்த திட்டங்கள் வழங்கப்படும்.

இந்த முயற்சி, திறன் இந்தியா மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா ஆகிய திட்டங்களின் நோக்கங்களை ஆதரித்து, இளைஞா்களின் வலிமை மற்றும் பிராந்திய பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று பி.எம்.சி. டெக் கல்வி குழுவின் தலைவா் பி.குமாா் தெரிவித்தாா்.

படவரி...

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒசூா் பிஎம்சி கல்லூரித் தலைவா் பி.குமாா், தளவாடத் துறை திறன் கவுன்சில் இயக்குநா் சிவகுமாா்.

.

‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ - உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

செய்யாறு உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சி

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT